186
இயக்குனர் சிவா முதன்முறையாக ரஜினியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் அண்ணாத்த.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, தீபாவளி ஸ்பெஷலாக படமும் அதிக திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
வெளிநாட்டில் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான பெருமை அண்ணாத்த படத்திற்கு இருக்கிறது.
தற்போது படமும் முதல் நாள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் படம் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.