வனிதா ஆரம்பித்த புதிய தொழில்: கொட்டும் பண மழையில் இது வேறயா? ரசிகர்கள் சரமாரியான கேள்வி

by News Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலமான வனிதா தற்போது புதிய தொழில்ஒன்றினை துவங்கியுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்த வனிதா, பின்பு மகள்கள் மீது வைத்த பாசத்தினால் அனைவரது நெஞ்சிலும் இடம்பிடித்தார்.

பின்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்து சர்ச்சையில் சிக்கிய வனிதா பின்பு, அனைத்து பிரச்சினையிலிருந்து வெளியே வந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த வனிதா தனது யூடியூப் சேனலில் சமையல், மேக்கப் என காணொளிகளை போட்டு அசத்தினார். பின்பு பவர்ஸ்டாருடன் நடித்த படம் அனைவராலும் பேசப்பட்டது.

இந்த நிலையில் வனிதா தற்போது புதிய தொழிலை தொடங்கியுள்ளார். அதாவது வனிதா விஜயகுமார் பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையை புதிதாக திறந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment