சட்டவிரோதமாக ஓட்டல்களில் ‘ஜெய்பீம்’?

by Column Editor

இன்று (நவம்பர் 2) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தை சட்ட விரோதமாக தாபா ஓட்டல்களில் சூர்யாவின் ரசிகர்கள் திரையிட முயற்சித்து வருவதாக கூறப்படுவதை தொடர்ந்து, தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், சூர்யாவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

சூர்யா தான் தயாரித்து நடிக்கும் படங்களை, தொடர்ந்து ஓடிடி பிளாட் ஃபாம்மில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதே நேரம், திரையரங்கில் முதலில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியிடும் படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்பதில் திரையரங்கு உரிமையாளர்களும் உறுதியாக உள்ளனர். திரையரங்கில் வெளியாகி 21 நாட்களுக்கு பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிட எந்த தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இன்று ஓடிடி தளத்தில் வெளியான நடிகர் சூர்யாவின், ‘ஜெய்பீம்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் சூர்யாவின் ரசிகர்கள், ‘ஜெய் பீம்’ படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகாவிட்டாலும், ஏதேனும் ஒரு விதத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெளியிடப் போவதாக, தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment