288
			
				            
							                    
							        
    நம் அன்றாடம் உணவுகளில் அதிகமாக பயன்படுத்துவது துவரம் பருப்பு.
இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
இதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு ,நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் துவரம் பருப்பு சாப்பிடும் போது இதிலிருக்கும் போலிக் அமிலம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
துவரம் பருப்பு நம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நீண்ட நேரத்திற்கு பசியின்மையை ஏற்படுத்துவதால் இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
7.மேலும் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவது என்பது குறிப்பிடத்தக்கது.
