437
			
				            
							                    
							        
    தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் போன்று கூடுதலாக “500 கலைஞர் உணவகங்கள்” விரைவில் அமைக்கப்பட இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி அறிவித்திருக்கிறார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஆர்.சக்கரபாணி இதனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
