பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்) சீராரு ஞானத்தி னிச்சை செலச்செல வாராத காதல் குருபரன் பாலாகச் சாராத சாதக நான்குந்தன் பாலுற்றா ராராயு ஞானத்த னாமடிவைக் கவே. விளக்கம் : பாடல் #1698 இல் உள்ளபடி குருவின் திருவடியினால்…
திருமந்திரம்
-
-
பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்) சத்து மசத்துமெவ் வாறெனத் தானுன்னிச் சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியில் ஞானம் பெறப்பணிந் தானந்தச் சத்தியி லிச்சை தருவோன்சற் சீடனே. விளக்கம்: நிலையானதும் நிலை இல்லாததும் எவ்வாறு இருக்கின்றது என்பதை தனக்குள்ளேயே…
-
பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்) சாத்திக னாய்ப்பல தத்துவந் தானுன்னி யாத்திக வேதநெறி தோற்ற மாகியே யார்த்த பிறவியி னஞ்சி யறனெறி சாத்தவல் லானவனே சற்சீட னாமே. விளக்கம்: நன்மை தீமை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல்…
-
பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்) தொழிலார மாமணி தூயான சிந்தை யெழிலா ரிறைவ னிடங்கொண்ட போத வழலார் விறகாம் வினையது போகக் கழலார் திருவடி கண்டரு ளாமே. விளக்கம்: இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்கின்ற சாதகத்தில்…
-
பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்) சோதி விசாகந் தொடர்ந்திருந் தேள்நண்டு வோதிய நாளே யுணர்வது தானென்று நீதியு ணீர்மை நினைந்தவர்க் கல்லது வாதியு மேது மறியகி லானே. விளக்கம் : பௌர்ணமி அன்று விசாக நட்சத்திரம் வருகின்ற நாளில்…
-
பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்) பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை விதைக்கின்ற வித்தினை மேனின்று நோக்கிச் சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி யிசைக்கின்ற வன்பருக் கீயலு மாமே. விளக்கம்: இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற போதே பரம்பொருள்…
-
பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்) பதைத் தொழிந்தேன் பரமாவுன்னை நாடி யதைத் தெழுந்தேற் றினியாரோடுங் கூடேன் சிதைத் தடியேன் வினை சிந்தனைதீர வுதைத் துடையா யுகந்தாண்டரு ளாயே. விளக்கம்: உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில் உன்னை அடைவதற்கு…
-
பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்) தொழு தறிவாளர் சுருதி கண்ணாகப் பழு தறியாத பரம குருவை வழி யறிவார் நல்வழி யறிவாள ரழி வறிவார் மற்றையல்லா தவரே. விளக்கம்: இறைவனை பக்தியோடு வணங்கும் முறையை அறிந்தவர்கள் இறைவனை அடைவதை…
-
அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்) மன்னு மலமைந்தும் மாற்றும் வகையோரான் துன்னிய காமாதி தோயுந் தொழில்நீங்கான் பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதா னன்னிய னாவா னசற்சீட னாமே. விளக்கம்: உலக பற்றுக்களிலேயே நிலை பெற்று இருக்கின்ற மலங்களாகிய ஐந்து…
-
அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்) வைத்த பசுபாச மாற்று நெறிவைகிப் பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத் தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. விளக்கம்: பிறக்கும் போதே உடலுக்குள் வைத்த இருளுக்குள் இருக்கின்ற ஆன்மாவையும்…