வெள்ள நீரில் 4 பேர் மாயம்-எங்குருவாதொட பகுதியில் சம்பவம்!

by Lankan Editor

வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பிரதேசவாசிகளும் எங்குருவாதொட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment