விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

by Editor News

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று (23.05.2024) வியாழக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விளாவட்டவான் கிராமத்தில் ஆற்றங்கரை ஓரத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம் அமைத்துள்ளது.

ஆலயத்தின் சடங்கு உற்சவ ஆரம்ப நாளான நேற்று (23.05.2024) இரவு விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து கும்பம் எடுத்து செல்லப்பட்டு அம்பாளின் திருக்கதவு திறக்கப்பட்டு சடங்கு உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெறும் அம்பாளின் சடங்கு உற்சவம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிறைவடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment