புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு..

by Editor News

மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். புதிதாக ரேஷன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2.24 கோடி ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில் அரசு திட்டங்களுக்காக புதிய அட்டைக்கு பலரும் விண்ணப்பம் செய்துள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேசன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் புதிய ரேஷன் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment