சுரக்காய் தோசை..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
சுரைக்காய் – 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் – 2
மிளகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தண்ணீர், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இந்த சுரக்காய் தோசை செய்ய முதலில், பச்சரிசியை தண்ணீரால் நன்கு கழுவி, 2 மணிநேரம் நேரம் ஊற வையுங்கள். அதன் பிறகு மிக்சர் ஜாரில் பச்சரிசியைப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு மென்மையாக அரைத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே மிக்சர் ஜாரில் துருவிய வைத்த சுரைக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து, அதை எடுத்து வைத்த பச்சரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். மேலும் அதில், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை, உங்கள் சுவைக்கேற்ப உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது சுரைக்காய் தோசை செய்வதற்கான மாவு தயார்.

தோசை சுட தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாகுங்கள். பிறகு அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அதன் மேல் கரைத்து வைத்த மாவை வட்ட வடிவில் ஊற்றி கொள்ளுங்கள். தோசை நன்றாக விட தோசையை சுற்றி எண்ணெய் விட்டுங்கள். தோசையைத் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவ்வளவுதான் இப்போது அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான சுரைக்காய் தோசை ரெடி!! இந்த சுரக்காய் தோசைக்கு நீங்கள் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது கார சட்னி வைத்து சுவை அருமையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment