எலுமிச்சை சாதம்…!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் – 2 கப்

எலுமிச்சை சாறு – இரண்டு பழம்

வேர்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி – 10

பச்சை மிளகாய் – 1

வரமிளகாய் – 2

மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டுக்கொள்ளுங்கள்.

கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதில் பொடியாக உடைத்த முந்திரி, தோல் நீக்கிய வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

பிறகு இதில் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கிள்ளிய வரமிளகாய் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள்.

தற்போது பிழிந்தது வைத்துள்ள எலுமிச்சை சாறை இதில் ஊற்றி ஒரு கொதி கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு : எலுமிச்சை சாறு சேர்த்த பின்பு அதிக நேரம் கொதிக்க விடாதீர்கள்.

அடுத்து உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தில் இதை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டுக்கொள்ளுங்கள்.

எலுமிச்சை சாதம் தயாரானவுடன் கரண்டியால் மேற்பரப்பை நன்கு அழுத்தி அதை அப்படியே இரண்டு மணிநேரம் மூடி வைத்து விடுங்கள்.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தால் எலுமிச்சை சாதம் நன்றாக ஊறி இருக்கும். இப்போது எலுமிச்சை சாதத்தை எடுத்து சாப்பிட்டால் அதன் சுவை அருமையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment