‘குக் வித் கோமாளி’ சீசன் 5! எப்போது துவங்குகிறது தெரியுமா… தேதியை அறிவித்த விஜய் டிவி!

by Lifestyle Editor

விஜய் டிவியில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்த படியாக… பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நிகழ்ச்சியாக உள்ளது ‘குக் வித் கோமாளி’. நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வரும் வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை போல் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலர், இன்று திரைப்படங்களில் நடித்து வருவதை பார்க்க முடிகிறது. அஷ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, போன்ற குக்குகளுக்கு இந்த நிகழ்ச்சி சில படங்களில் நடிக்க வழிவகுத்தது.

அதே போல், இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து பிரபலமான, புகழ், ஷிவாங்கி, பாலா, தங்கதுரை, போன்றோர்களுக்கும் இந்த நிகழ்ச்சி பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது.

சற்றுமுன் ’குக் வித் கோமாளி’ சீசன் 5, நிகழ்ச்சி ஏப்ரல் 27 முதல் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் இரவு 9.30 என்று ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு, புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு… ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment