கோடையில் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா…? தவறுதலாக இவற்றைச் சாப்பிட வேண்டாம்…

by Lifestyle Editor

இன்றைய காலக்கட்டத்தில் பலர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். காரணம் மாறிவரும் வாழ்க்கை முறை என்று கூட சொல்லலாம். ஆனால், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்தால் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்தலாம்.

பொதுவாகவே, எல்லோரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினை எதுவென்றால், அது ‘ஒற்றைத் தலைவலி’ தான். இது ஒரு நரம்பியல் பிரச்சனை. இதனால் தலையின் ஒரு பகுதியில் மட்டும் கடுமையான வலி ஏற்படும். மேலும், இந்த வலி சில மணிநேரங்கள் முதல் 2 அல்லது 3 நாட்கள் வரை நீடிக்கும். இவற்றுடன் வயிற்றுப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி போன்றவையும் கூட சிலருக்கு வருமாம். உங்களுக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால், தவறுதலாக இவற்றைச் சாப்பிட வேண்டாம். அவை..

காபி:

தலைவலி வந்த உடனேயே டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. மேலும் காபி குடிப்பதால் தலை வலி நீங்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. மேலும் அது தவறு. ஏனெனில், காபியில் காஃபின் அதிகம் உள்ளது. இது மூளை நரம்பு செயல்பாட்டில் குறுக்கிட்டு, மூளையில் இரத்த ஓட்டத்தை குறைகிறது. இதனால் இன்னும் கடுமையான தலைவலிக்கு இது வழிவகுக்கும்.

சாக்லேட்:

ஒற்றைத் தலைவலி இருந்தால், சாக்லேட்டை சாப்பிட கூடாது. காரணம், சாக்லேட்டில் காஃபின் மற்றும் பீட்டா ஃபைனிலெதிலமைன் உள்ளது. இது இரத்த நாளங்களில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இது தலைவலிக்கு வழிவகுக்கிறது.

ஐஸ்கிரீம்:

ஒற்றைத் தலைவலி இருந்தால், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்:

வெண்ணெய், பேரீச்சம்பழம், அத்திப்பழம், திராட்சை, பூண்டு, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் சாப்பிட கூடாது. இது தலைவலியை மோசமாக்கும்.

சிட்ரஸ் பழங்கள்:

ஒற்றைத் தலைவலி இருந்தால், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு. காரணம் இவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது பிரச்சினையை மேலும் மோசமாக்கும்.

பால் பொருட்கள்:

ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால் பால் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. காரணம் இதில் டைரமைன் என்ற தனிமம் உள்ளது. இது ஒற்றைத் தலைவலியை மேலும் அதிகரிக்கும்.

என்ன சாப்பிடலாம்?:

ஒற்றைத் தலைவலியிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்க, இஞ்சி, கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு, பாதாம், கீரை, அவகேடோ மற்றும் டார்க் சாக்லேட் உள்ளிட்ட மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இது ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது. பொதுவாக, இந்த ஒன்றை தலைவலி வெப்பம் மற்றும் சூரிய ஒளியால் அதிகரிக்கிறது. நீர்ச்சத்து குறைபாடு தான் முக்கிய காரணம். உண்மையில் கோடைக்காலத்தில் உடல் வியர்வை அதிகமாக வெளியேறும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் கோடையில் ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்கலாம். இதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment