தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்கும்..இந்திய வானிலை மையம்

by Lifestyle Editor

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையத் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் :

நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெளுத்து வாங்கும் வெயிலால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர். வெயிலின் காரணமாக நீர்நிலைகள் வற்றி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தற்போதே தண்ணீர் பற்றாக்குறை தலை விரித்தாடத் தொடங்கியுள்ளது.

இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு :

மழை பெய்தால் மட்டுமே எஞ்சியுள்ள கோடை நாட்களை சமாளிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதோடு இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்றும் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை மையம் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? இந்த ஆண்டு மழை பொழிவு எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை :

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, படிப்படியாக முன்னேறி வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வரை பரவும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிவு இருக்கும் என்பதால் மழை மறைவு பிரதேசங்களும் ஆதாயம் அடையும்.

வலுவிழந்த எல் நினோ :

இதனால் தென்மேற்கு பருமழை மீதான எதிர்ப்பார்ப்பு எப்போதுமே மக்களுக்கு அதிகம்தான். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எல் நினோ வலுவிழந்துள்ளதால் இந்த ஆண்டு ஆண்டு மழைக்கு பஞ்சம் இருக்காது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 106 சதவீதம் மழை பொழிவு இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இயல்பான பருவமழை :

மேலும் எல்லா சூழ்நிலைகளும் இயல்பான பருவமழைக்கு சாதகமாக உள்ளன என்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை நன்றாக இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் வெப்பநிலை முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் மற்றும் வடக்கில் நிலவும் பனிமூட்டத்தின் அளவு ஆகியவையே தென் மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் என்பதற்கான காரணம் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பருவமழையின் இரண்டாம் பாதி :

தற்போது, ​​பசிபிக் பகுதியில் மிதமான எல் நினோ நிலைகள் நிலவுகின்றன என்றும் இருப்பினும், பருவமழை காலத்தின் தொடக்கத்தில் அதாவது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எல் நினோ பலவீனமடையக்கூடும் என்றும் அதே சமயம் லா நினோ உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பருவமழையின் இரண்டாம் பாதியான ஆகஸ்ட் மற்றும் செப்டம் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் எல்நினோ :

எல் நினோ பசிபிக் பெருங்கடலில் அசாதாரணமான வெப்பமயமாதலால் உருவாகிறது. இந்தியாவில் வெப்பமான கோடை, வறட்சி மற்றும் பலவீனமான பருவமழை ஆகியவற்றுடன் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எதிர் விளைவுகளை ஏற்படுத்தி வரும் எல் நினோ சராசரியாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. பொதுவாக ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment