கத்திரிக்காய் ரசம்…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 1/4 கிலோ

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

வரமிளகாய் – 2

புளி கரைசல் – 1/2 கப்

நசுக்கிய வெல்லம் – 2 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிகட்டி 1/2 கப் புளி கரைசலை எடுத்து வைக்கவும்.

கத்தரிக்காயின் தோலில் எண்ணெய் தடவி அவற்றை அடுப்பில் குறைந்த தீயில் நன்கு சுட்டு எடுத்து தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள்.

பின்னர் சுட்ட கத்தரிக்காவின் தோலையும், காம்பையும் நீக்கி விட்டு ஒரு கிண்ணத்தில் போட்டு கரண்டியினை பயன்படுத்தி நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

கத்தரிக்காயை நன்றாக மசித்த பிறகு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் இதனுடன் சிறிதளவு நசுக்கிய வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

தற்போது கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து அதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து கொள்ளவும்.

இவை பொரிந்ததும் இரண்டாக கிள்ளிய வரமிளகாய், பெருங்காய தூள் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

பின்னர் இவற்றை தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்து கலந்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.

Related Posts

Leave a Comment