பேச்சுலர் குஸ்கா…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

மசாலா அரைக்க தேவையானவை :

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

நடுத்தர பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 4

இஞ்சி துண்டு – 1

பூண்டு – 8 பல்

இலவங்கப்பட்டை : 1

ஏலக்காய் – 2

நட்சத்திர பூ – 1

ஜாதிபாத்ரி

புதினா – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

மற்ற பொருட்கள் :

பாசுமதி அரிசி – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 1

தயிர் – 1/2 கப்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

பிரிஞ்சி இலை – 2

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பாசுமதி அரிசியை நன்றாக அலசி ஒரு பௌலில் தேவையான அளவு தண்ணீருடன் ஒரு மணிநேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, நட்சத்திர பூ, ஜாதிபாத்ரி மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்துகொள்ளவும்.

பின்னர் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி துண்டு, பூண்டு, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

வதக்கிய அனைத்தும் நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஓரளவிற்கு கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் தயிர், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இவை நன்கு கொதித்தவுடன் ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து கலந்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திருந்தால் சூடான குஸ்கா சாப்பிட தயாராக இருக்கும்.

இந்த குஸ்காவை வெங்காய தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment