ஆடு ஜீவிதம் படத்தின் முதல் விமர்சனம்..

by Lifestyle Editor

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் தனது விமர்சனத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

முதல் விமர்சனம்

இந்த விமர்சன பதிவில் “ஆடு ஜீவிதம் எனும் அற்புதமான படம் பார்த்தேன். விஷுவல் காட்சிகள் பிரமாதம். நடிகர் பிரித்விராஜ், உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள். அற்புதமான BGM உடன் இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான். இந்த உண்மை கதையை செல்லுலாய்டில் கொண்டு வந்ததற்காக இயக்குநர் பிளஸ்ஸிக்கு மிக்க நன்றி. ஒளிப்பதிவு இணையற்றவை. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்” என கூறியுள்ளார்.

வெளிவந்துள்ள முதல் விமர்சனம் படத்திற்கு மிகப்பெரிய நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் திரையரங்கில் ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்று.

Related Posts

Leave a Comment