பிரட் ரோல்.!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

10 பிரெட்
2 முட்டை
1 பாக்கெட் சீஸ்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வைத்திருக்கும் பிரெட்டை சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்தி தேய்ப்பது போல பிரெட்டை லேசாக தேய்த்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தேய்த்து வைத்துள்ள பிரெட் மீது சீஸ் ஸ்லைஸ்களை வைத்து பிரெட்டை ஒரு ரோலாக உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ரோல்களை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். ரோல் செய்து வைத்துள்ள பிரெட்டுகளை அடித்து வைத்துள்ள முட்டையில் நன்றாக படுமாறு பிரட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். நன்றாக முழுவதும் ரோல்கள் பொரிந்த வெந்த பிறகு சூடாக பரிமாறினால் சுவையான ஈஸி பிரெட் ரோல் தயார்.

Related Posts

Leave a Comment