கொலஸ்ட்ராலை குறைக்க துளசியை இப்படி சாப்பிடுங்க..

by Lifestyle Editor

லிப்பிட் ஃபுரொபைலை இயற்கையான முறையில் மேம்படுத்தும் துளசி :

இயற்கையான வைத்திய முறைகளில் சில மூலிகைகள் தான் மதிப்புவாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அதில் ஒன்று துளசி இலை. மதச் சடங்குகள் மற்றும் பூஜைகளில் பயன்படுத்தப்படும் துளசி புனிதமான இலையாக கருதப்படுகிறது. மேலும் இதில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் உள்ளது. இயற்கையான முறையில் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க துளசி இலை உதவுகிறது. நம் கொலஸ்ட்ரால் அளவை துளசி இலை எப்படி ஒழுங்குப்படுத்துகிறது என்பதையும் இதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் இப்போது பார்ப்போம்.

ஆண்டி ஆக்ஸிடெண்ட் :

துளசி இலைகளில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இவை நம் உடலில் உள்ள தீங்கு நிறைந்த ஃப்ரீ ரேடிகல்ஸை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் செல்களை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் துளசியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆழற்சி எதிர்ப்பு பண்புகள் :

நமது உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும் வல்லமை கொண்ட அழற்சி எதிர்ப்பு பண்புகள் துளசி இலைகளில் அதிகளவு உள்ளது. நம் உடலில் அதிகமாக கொலஸ்ட்ரால் அளவு இருக்கும் போது தமனிக்குள் வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கத்தை குறைத்து, சீரான ரத்த ஓட்டத்தை பராமரித்து கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது.

லிப்பிட் ஃபுரொபலை மேம்படுத்தும் :

அடிக்கடி துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் நம்முடைய லிப்பிட் ஃபுரொபைல் மேம்படுகிறது. நமது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளீசரைட் அளவை குறிப்பதே லிப்பிட் ஃபுரொபைல். துளசியை சாபிடுவதால் நம் உடலில் கெட்ட கொலட்ஸ்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இந்த இரண்டு செயல்களுமே நமது இதயத்திற்கு ஆரோக்கியமானதாகும்.

லிப்பிட் ஃபுரொபலை மேம்படுத்தும் :

அடிக்கடி துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் நம்முடைய லிப்பிட் ஃபுரொபைல் மேம்படுகிறது. நமது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளீசரைட் அளவை குறிப்பதே லிப்பிட் ஃபுரொபைல். துளசியை சாபிடுவதால் நம் உடலில் கெட்ட கொலட்ஸ்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இந்த இரண்டு செயல்களுமே நமது இதயத்திற்கு ஆரோக்கியமானதாகும்.

துளசியை எப்படி சாப்பிட வேண்டும்?

நீங்கள் தினசரி துளசி சாப்பிட வேண்டுமென்றால், இதை டீ-யாக தயாரித்து குடிப்பதே சிறந்த வழி. சூடான நீரில் சிறிதளவு துளசி இலையை சேர்த்து, 8 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்கவிடுங்கள். அவ்வளவுதான் சுவையும் நறுமணமும் மிகுந்த துளசி டீ தயார். கஃபைன் இல்லாத இந்த மூலிகை பானம் உங்கள் உடலுக்கு சிறந்த பலனைத் தரும். கூடுதல் சுவை தேவைபட்டால், தேன் அல்லது லெமன் ஜூஸ் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். இல்லை என்றால் டீ குடிக்க முடியாது என்பவர்கள், செடியிலிருந்து துளசி இலையை பறித்து வாயில் போட்டு மெல்லுங்கள்.

Related Posts

Leave a Comment