கிரீன் டீ vs பிளாக் டீ.. கோடைகாலத்தில் எது ஆரோக்கியமானது மற்றும் சிறந்தது.?

by Editor News

நீங்கள் டீ பிரியர் என்றால், ஒரு கப் சூடான டீ குடிப்பதன் மூலம் உங்கள் நாளை தொடங்குவீர்கள். டீயில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன மேலும் இது மன அழுத்தத்தை போக்க சிறந்த வழி. க்ரீன் டீ மற்றும் பிளாக் டீ என ஆரோக்கியத்திற்காக சில வகை டீ-க்களை மக்கள் விரும்பி சுவைக்கிறார்கள். ஆனால் க்ரீன் மற்றும் பிளாக் டீ இரண்டுமே ஒரே தேயிலை செடியான கேமிலியா சினென்சிஸின் இலைகளில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. இரண்டும் ஒரே தாவரத்திலிருந்து எடுக்கப்படுபவை என்றாலும் கணிசமாக வேறுபடுகின்றன.

இரண்டுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவெனில் பிளாக் டீ ஆக்சிடேஷன் ப்ராசஸ் (oxidation process) செய்யப்படும், ஆனால் கிரீன் டீ ஆக்சிடேஷன் ப்ராசஸ் செய்யப்படாது. பிளாக் டீ-க்கான, இலைகள் முதலில் உருட்டப்பட்டு, பின்னர் காற்றில் ஆக்சிடேஷன் ப்ராசஸ் ட்ரிகர் செய்யப்படும். கிரீன் டீ-யில் குறிப்பாக , ஈஜிசிஜி (epigallocatechin gallate) அதிகமாக உள்ளது. மேலும் கிரீன் டீ-யில் புற்றுநோய், இதய நோய் மற்றும் பிற நோய்களை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட கேடசின் நிறைந்துள்ளது.

காபியில் உள்ள காஃபின் கிரீன் டீயில் கால் பங்கு இருப்பது ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பச்சை தேயிலை உற்பத்தியில் ஆக்சிஜனேற்ற செயல்முறை இல்லாததால், EGCG மற்ற வடிவங்களாக மாறாமல் தக்க வைக்கப்படுவதால் எடை இழப்பு திட்டங்களை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ குறைந்த அமிலத்தன்மை கொண்டது. சுத்தமான ஆர்கானிக் கிரீன் டீ பிரகாசமான சருமம், விரைவான வளர்சிதை மாற்றம் மற்றும் அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. ஒரு கப் சூடான கிரீன் டீ, குளிர்பானத்தை விட அதிக புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. இதில் உள்ள theanine உடலையும், மனதையும் அமைதிப்படுத்த உதவுகிறது.

பிளாக் டீ-க்காக தயாரிக்கப்படும் தேயிலை நொதித்தல் செயல்பாட்டிற்கு உட்படுத்தப்படும் போது அதிலிருக்கும் EGCG-ஆனது Theaflavins மற்றும் Thearubigens-ஆக மாற்றப்படுகிறது. எனவே கிரீன் டீ-யானது கேடசின் தரம் மற்றும் அளவு அடிப்படையில் பிளாக் டீ-யை விட சிறப்பாக உள்ளது. ஆனால் பிளாக் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் அது ஆரோக்கியமானது. பிளாக் டீயானது காபியில் உள்ள காஃபினில் மூன்றில் ஒரு பங்கையும், எல்-தியானையும் கொண்டுள்ளது.

காஃபின் மற்றும் எல்-தியானின் கலவை மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. அதே நேரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றிகளுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. பிளாக் டீ கவனத்தை ஊக்குவிக்கிறது. பிளாக் டீயில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், மைல்ட் பிளாக் டீயில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்க எலுமிச்சை தேவைப்படுகிறது. பிளாக் டீ இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் பிரபலமான பானமாக, கோடையில் மிகவும் விரும்பப்படும் பானங்களில் ஒன்றாக உள்ளது. பிளாக் டீ வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் மற்றும் சந்தேகத்திசந்தேகத்திற்கு இடமின்றி உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும்.

பிளாக் டீயில் Mellow முதல் robust வரை, கிரீன் டீயில் vegetal முதல் nutty வரை பல்வேறு வகைகள் உள்ளன. இதில் நீங்கள் எந்த வகையான டீ-யை தேர்வு செய்தாலும், ஆரோக்கியமான, சுவையான கப் டீயை நீங்கள் குடிப்பீர்கள் என உறுதியாக நம்பலாம்.. சுருக்கமாக சொல்வதென்றால் தண்ணீர் கொண்டு சூடேற்றி தயாரிக்கப்படும் நிலையில் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ இரண்டுக்கும் அவற்றின் செயலாக்க முறைகள் மட்டுமே வித்தியாசம். எனவே பிளாக் டீ மற்றும் கிரீன் டீ இரண்டுமே கோடையில் சிறந்த பான விருப்பங்களாக அமையும் மற்றும் இரண்டையுமே மிதமாக அருந்தினால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மைகள் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment