கோழி குழம்பு..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

மசாலா அரைக்க தேவையானவை :

கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த சிவப்பு மிளகாய் – 4

மிளகு – 2 டீஸ்பூன்

பெரும்சீரகம் – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 4

கசகசா – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 15

சின்ன வெங்காயம் – 20 – 25

தண்ணீர் – 1/2 கப்

குழம்பு செய்ய தேவையானவை :

சிக்கன் – 1 கிலோ

சின்ன வெங்காயம் – 25

தக்காளி – 2

துருவிய தேங்காய் – 1/2 கப்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – தேவைக்கேற்ப

தேங்காய் அரைக்க வெதுவெதுப்பான நீர் – 1/2 கப்

கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா அரைக்க எடுத்து வைத்துள்ள பட்டை, கிராம்பு, கொத்தமல்லி விதைகள், காய்ந்த சிவப்பு மிளகாய், மிளகு, பெரும்சீரகம், சீரகம், கசகசா மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

பின்னர் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி அதையும் மற்றொரு தட்டிற்கு மாற்றி ஆறவைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வருத்த மசாலா பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்கு மைய அரைத்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் வதக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும் அலசி வைத்துள்ள கோழி துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின்னர் அதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.

பிறகு கடாயை மூடி சிக்கன் மென்மையாக வேகும் வரை குறைவான தீயில் வைத்து சமைக்கவும். அடிக்கடி மூடியை திறந்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

இதற்கிடையே துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி மிருதுவான பேஸ்ட் போல் அரைக்கவும்.

பின்னர் அதை கோழி குழம்புடன் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

சிக்கன் நன்றாக மென்மையாக வெந்து குழம்பு கொதித்ததும் உங்களுக்கு விருப்பமென்றால் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சிறிதளவு தூவி அடுப்பை அணைக்கவும்.

அவ்வளவுதான் சுவையான கொங்கு ஸ்டைல் கோழி குழம்பு பரிமாற ரெடி….

Related Posts

Leave a Comment