ராம்சரண் படத்தில் இணைந்த ஜான்வி கபூர்…

by Lifestyle Editor

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது, அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்து வருகிறார். இந்த படம் நீண்டகாலமாக உருவாக்கத்தில் உள்ளது.

இதையடுத்து ராம்சரண் உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் ஜான்வி அறிமுகமாகவுள்ள நிலையில் இரண்டாவது படமாக ராம்சரண் படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாகவும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Related Posts

Leave a Comment