வார ராசிபலன்கள்(04-03-24)to(10-03-24)

by Lifestyle Editor

மேஷம்:

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை நண்பர் அல்லது அரசு உதவியுடன் நிறைவு செய்வீர்கள். வார்த்தைகளால் உங்கள் எதிரிகளையும் கூட நண்பர்களாக வசப்படுத்துவீர்கள். உங்களிடம் கடன் பெற்றவர் பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டால் இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட எண் – 5
அதிர்ஷ்ட நிறம் – ப்ளூ

ரிஷபம்:

பணி ரீதியாகவும், வணிக ரீதியாகவும் இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் மிகுந்ததாக அமையும். கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். அதே சமயம் உங்கள் உடல் நலனை நீங்கள் அலட்சியம் செய்வதால் உடல் வலி மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம். வாரத்தின் பிற்பகுதியில் சவால் மிகுந்த முதலீடுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண் – 9
அதிர்ஷ்ட நிறம் – பச்சை

மிதுனம்:

இந்த வாரம் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் எதிர்காலம் சார்ந்து சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சீனியர்களையும், ஜூனியர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். நிலம் தொடர்புடைய பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு செல்லாமல் பேசி முடித்து கொள்ளுங்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நீடிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 15
அதிர்ஷ்ட நிறம் – க்ரே

கடகம்:

தேவையற்ற வேலைகளில் நேர விரயம் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளால் உங்கள் மனம் அதிருப்தி அடையும். இந்த வாரத்தில் யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். வணிக நோக்கத்திற்காக நீண்ட தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டி இருக்கும். புதிய முதலீடுகளை செய்யும் முன்பாக நிபுணர்களை ஆலோசிக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 1
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

சிம்மம்:

இந்த வாரம் உங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டம் உடையதாக இருக்கும். பணிகளை திட்டமிட்ட ரீதியில் சரியான தருணத்திற்கு நிறைவு செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் பாசிட்டிவ் மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் அல்லது குடும்பத்தில் நிலவக்கூடிய மாபெரும் பிரச்சனைக்கு உங்கள் நண்பர்களின் உதவியுடன் தீர்வு காண்பீர்கள். பயணங்கள் மூலம் பொருளாதார பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 3
அதிர்ஷ்ட நிறம் – பிங்க்

கன்னி:

நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைய வேண்டும் என்றால் நீங்கள் மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்களுக்கு இந்த வாரம் சுமாரானதாக அமையும். வணிகர்கள் பணப்பரிவர்த்தனைகளை செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் முதலீடுகளை மிக கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட எண் – 10
அதிர்ஷ்ட நிறம் – கருப்பு

துலாம்:

திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்திற்கு நிறைவு செய்வீர்கள் மற்றும் உங்கள் முயற்சிக்குத் தகுந்த முழுமையான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தை மாற்ற வேண்டும் என்ற உங்கள் நீண்டகால விருப்பம் இந்த வாரத்தில் நிறைவேறும். நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் திடீர் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 12
அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு

விருச்சிகம்:

இந்த வாரத்தின் தொடக்கத்தில் உங்களுக்கு நற்செய்தி வந்து சேரும். அது உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட பணிகள் சார்ந்து இப்போது பலன்களை பெறுவீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட எண் – 8
அதிர்ஷ்ட நிறம் – பர்பிள்

தனுசு:

வணிகம் சார்ந்த நற்செய்திகள் வந்து சேரும். வேலை தேடும் நபர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் மட்டுமல்லாது வெளியிடத்திலும் உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். பெரும் சாதனைகளை நீங்கள் நிகழ்த்துவதால் உங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரம் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரும் பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 11
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை

மகரம்:

இந்த வாரத் தொடக்கத்தில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள் அல்லது மிகப்பெரிய அளவிலான செலவு ஏற்படும். எனினும் உங்கள் புத்தி கூர்மை காரணமாக இதை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குழப்ப நிலையில் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்க வேண்டாம். பணியிடத்தில் எதிரிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 9
அதிர்ஷ்ட நிறம் – பிரவுண்

கும்பம்:

அதிர்ஷ்டத்தின் பலன் உங்கள் பக்கம் இருப்பதால் பணியிடத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்வீர்கள். உங்கள் பணிகளுக்கு சீனியர்கள் மற்றும் ஜூனியர்களிடம் பாராட்டு கிடைக்கும். பெண்கள் ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக நேரம் செலவு செய்வீர்கள். உங்கள் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 7
அதிர்ஷ்ட நிறம் – தங்க நிறம்

மீனம்:

பணத்தை பலனுள்ள வகையில் பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். வீட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிக்கவும். எந்த ஊரு வேலையையும் அவசரகதியில் செய்ய வேண்டாம். வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனம் தேவை. சக ஊழியர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண் – 13
அதிர்ஷ்ட நிறம் – மரூன்

Related Posts

Leave a Comment