முதலமைச்சருக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து..

by Lifestyle Editor

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்தை பெறுகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தொலைபேசி மூலம் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்.

Related Posts

Leave a Comment