71
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் இன்று செய்யப்படுகின்றன.அத்துடன் 5 நாட்களுக்கு பொது கூட்டங்களும் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை…
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று…
அவர் என்மீது காட்டிய தனி அன்பும்,பண்பும் என்றும் என் நினைவில்… என்று குறிப்பிட்டுள்ளார்.