அட்டகாசமாக வந்தது கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

படங்களில் அங்கங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட இப்போது அவ்வளவாக இருப்பது இல்லை. மொத்தமாக காமெடியை மையப்படுத்தி படங்களை மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றே கூறலாம்.

அந்த வகையில் காமெடியை மையப்படுத்தி கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கலகலப்பு. சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம், விமல், சிவா, அஞ்சலி, ஓவியா என பலர் நடிக்க வெளியானது.

மசாலா கபே ஹோட்டல் மையப்படுத்திய ஒரு சூப்பரான காமெடி கதை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் கலகலப்பு 2 படம் இயக்கினார், படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி இருந்தது.

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தான் கலகலப்பு 3வது பாகம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அரண்மனை 4 படத்தை முடித்த பிறகு கலகலப்பு 3 பற்றி சுந்தர் சி பிளான் செய்துள்ளாராம்.

Related Posts

Leave a Comment