நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் பூந்தண்டிகை திருவிழா!

by Lifestyle Editor

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஐந்தாம்திருவிழாவின் பூந்தண்டிகைத் திருவிழா ( 19) நேற்று மாலை சிறப்பாக இடம்பெற்றது.

இவ் தேவஸ்தானத்தின் திருவிழா கடந்த 15.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 23.02.2024 அன்று இரதோற்சவமும், மறுநாள் தீர்த்ததோற்சவமும் இடம்பெற்று, அன்று மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவடையவுள்ளது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் மஹோற்சவத்தை நடாத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment