அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்…

by Lifestyle Editor

கொரோன காலகட்டத்தில் OTT-தளங்கள் அசுர வளர்ச்சியை அடைந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் OTT தளத்தில் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது OTT-யில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளை பற்றி பார்க்கலாம் ..

இதில் 5-வது இடத்தில் பிரியாமணி பிடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 1 மற்றும் 2 வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள இவர், இப்படத்திற்காக ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

4 வது இடத்தில் நடிகை ராஷி கண்ணா உள்ளார். இவர் ஃபார்ஸி, ருத்ரா போன்ற வெப் தொடர்களில் நடித்துள்ளார். ஃபார்ஸி வெப் சீரிஸில் நடிக்க ரூபாய் ரூ.1.5 கோடி அவர் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த லிஸ்டில் 3 வது இடத்தை பிடித்து இருக்கிறார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையான இவர் ஆர்யா மற்றும் ஆர்யா 2 போன்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதற்காக ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

2 வது இடத்தை பிடித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. இவர் சேக்ரட் கேம்ஸ், ஓ.கே கம்ப்யூட்டர், மேட் இன் ஹெவன் போன்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இவர் ஒரு வெப் தொடரில் நடிக்க ரூ 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லிஸ்டில் 1 இடத்தை பிடித்து இருக்கிறார் சமந்தா. இவர், இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்க்காக நடிகை சமந்தா ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்தாக தகவல் வெளிவந்துள்ளது.

Related Posts

Leave a Comment