கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் மருத்துவ குணங்கள்..

by Lifestyle Editor

தேன் பழம் என்று சொல்லக்கூடிய கற்பூரவல்லி வாழைப்பழத்தை பிடிக்காதோர் யாரும் இருக்க முடியாது. ஒரு பழம் சாப்பிட்டாலும் தேன் போல் தெகிட்டிவிடும். இத்தனை சுவை நிறைந்த கற்பூரவள்ளியில் நன்மைகளும் நிறைந்துள்ளன அவை என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கற்பூரவள்ளியில் இருக்கும் ஊட்டச்சத்துகள் : கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ , பி6 மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. அதோடு மக்னீசியம் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு போதுமான ஆற்றல் இந்த பழத்திலிருந்தே கிடைக்கிறது. இது தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்கிறது : கற்பூரவள்ளி பழத்தில் பொட்டாசியம், சோடியம் , நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால் வயிற்றை எப்போதும் நிறைவாக வைத்திருக்கிறது. இதனால் நீண்ட நேரத்திற்கு பசிக்காமல் இருப்பதால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது : பல விருந்துகளில் சாப்பிட்டு முடித்ததும் கற்பூரவள்ளி பழத்தைதான் கொடுப்பார்கள். காரணம் நாம் சாப்பிட்ட உணவை எளிதில் செரித்துவிடும் என்பதால்தான். அவ்வாறு செரிமானத்தை தூண்டும் பண்புகள் கற்பூரவள்ளியில் தாராளமாக இருக்கிறது.

எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது : கற்பூரவள்ளி பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் , மாங்கனீஸ் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கிறது

சரும ஆரோக்கியம் : தோலில் உண்டாகும் புண்கள், சொறி, சிரங்குகள் சீக்கிரம் ஆற வேண்டுமெனில் கற்பூரவள்ளி சாப்பிட சரியாகலாம். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருப்பது கூடுதல் சிறப்பு.

இரத்த ஓட்டம் அதிகரிக்கிறதுமூளை வளர்ச்சி : கவனச்சிதறல், தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்கள் எனில் கற்பூரவள்ளி பழம் சாப்பிட சரியாகலாம். இது மூளை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. : இரத்த ஓட்டத்தை மேம்படுத்த கற்பூரவள்ளி சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

மூளை வளர்ச்சி : கவனச்சிதறல், தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்கள் எனில் கற்பூரவள்ளி பழம் சாப்பிட சரியாகலாம். இது மூளை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.நீங்கள் காலை உணவுடன் கற்பூரவள்ளி பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் நாள் முழுவதும் உற்சாக ஆற்றல் கிடைக்கும். அந்நாளுக்கு தேவையான ஊட்டச்சத்தும் பூர்த்தியடையும். இதனால் உடல் சோர்வு, கவலை போன்றவையும் நீங்கும்.

Related Posts

Leave a Comment