முன்னணி நடிகருடன் இணையும் த்ரிஷா… வெளியானது புதிய படத்தின் அறிவிப்பு

by Lifestyle Editor

புதிய படத்தில் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட நடிகரும், தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஒருவருடன் இணைகிறார் த்ரிஷா.

1999 இல் வெளியான ஜோடி படத்தில் அறிமுகமான த்ரிஷா 25 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து வருகிறார்.

40 வயதாகும் த்ரிஷா, முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோருடன் இணைந்து நடித்து விட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன், லியோ படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

அடுத்ததாக அஜித் நடித்து வரும் விடா முயற்சி படத்தில் கதாநாயகியாக இடம்பெற்றுள்ளார் த்ரிஷா.

மலையாளத்தில் மோகன் லாலுடன் ராம், தமிழில் கமலுடன் தக் லைஃப் என அடுத்தடுத்து முக்கிய படங்களில் த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிரஞ்சீவி நடிக்கும் விஷ்வம்பரா என்ற படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிப்பார் என்று அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Related Posts

Leave a Comment