துணிவு படத்தின் நள்ளிரவுக் காட்சி புதுச்சேரியில் ரத்து… ரசிகர்கள் ஏமாற்றம்

by Lifestyle Editor

புதுச்சேரியில் கடைசி நேரத்தில் துணிவு படத்தின் நள்ளிரவுக் காட்சி ரத்து செய்யப்பட்டது.

அஜித்தின் துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை அளித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் துணிவு திரைப்படம் ஓடும் திரைகளில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி கொண்டாடி மகிழ்ந்து படத்தைப் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த காட்சியை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தார். அதிகாலை 5 மணிக்கு காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment