‘படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் பாராட்டினார்’ – டான் படம் குறித்து இயக்குனர் சிபி தகவல்!

by Column Editor

முதலில் தொலைக்காட்சியில் அறிமுகமாக தொடங்கி அதன் பின் சினிமாவுக்குள் நடிகராக நுழைந்து தற்போது முன்னனி நடிகர்களுடன் Box Office-ல் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்திருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன்.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தற்போது புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்துமுடித்திருக்கும் படம் தான் டான்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டாக்டர் பட புகழ் பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் SJ சூர்யா, சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படம் குறித்து இதுவரை அறியப்படாத சுவாரஸ்ய தகவல்களை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் இயக்குனர் சிபி.

அவர் கூறுகையில், படத்தை முதன் முதலில் சிவகார்திகேயனிடம் கூறியபோது அவர் அதை நிராகரித்ததாகவும் அதன் பின் பல மாற்றங்கள் செய்து சுமார் 25 வெர்ஷன்களில் கதை வந்ததாகவும் அதன் பின்னர் மறுபடியும் அவரை தொடர்புகொண்டு கதை கூறியபோது பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மெர்சல் படப்பிடிப்பு சமயத்தில் இயக்குனர் அட்லீயிடம் உதவிஇயக்குனராக பணியாற்றியப்போது டான் படத்தின் ஒரு அங்கத்தை வைத்து குறும்படம் இயக்கியிருந்தாகவும் அதை தளபதி விஜய்யிடம் காண்பித்தாகவும், பின் அதை பார்த்துவிட்டு தளபதி தன்னை மனதார பாராட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Related Posts

Leave a Comment