இன்றைய ராசி பலன்(02-01-24)

by Lifestyle Editor

மேஷம்:

இன்று நீங்கள் சந்திக்கும் ஒரு புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை கொடுக்கலாம். இது தற்செயல் என்று நிராகரிக்க வேண்டாம். உங்கள் உள்ளுணர்வை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள பயப்பட வேண்டாம். நிதி சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் செலவை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்.

ரிஷபம்:

நீங்கள் விரும்பும் அன்பான மற்றும் அமைதியான உறவுக்கான வாய்ப்பை பெறுவீர்கள். உங்களது பயணம் இன்று சிறந்த பலன்களை கொடுக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். சீனியர்களிடம் நீங்கள் பெறும் ஆலோசனை நன்மைகளை அளிக்கும். வேலைகளுக்கு நடுவே உங்களை கவனித்து கொள்வது மன அமைதி கிடைக்க உதவும்.

மிதுனம்:

நீங்கள் விரும்பும் செயல்களை செய்து முடிக்க தேவையான ஆற்றலை பெறுவீர்கள். உங்கள் நிலையை உய்த்தும் புதிய வாய்ப்புகளுக்காக இன்று காத்திருங்கள்.முக்கிய முடிவுகளை எடுக்கும் போது உங்கள் இதயம் வழிநடத்தும் என்று நம்புங்கள். வெற்றி உங்கள் அருகில் தான் இருக்கிறது என்பதால் மனஉறுதியை இன்று விட்டுவிடாதீர்கள்.

கடகம்:

உங்கள் வாழ்வில் இன்று சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இது வெற்றி மற்றும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை குறிக்கிறது. உங்கள் காதல் வாழ்க்கையில் உறுதியான முடிவு எடுக்க வேண்டிய நிலை வரலாம். குழப்பமின்றி சரியான முடிவை எடுக்க உங்கள் உள்ளுணர்வை நீங்கள் நம்ப வேண்டும்.

சிம்மம்:

உங்கள் வாழ்வில் இன்று ஒரு சிறந்த உறவு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இது ஒரு புதிய காதலாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நெருங்கிய உறவுடனான அன்பு மற்றும் பாசம் அதிகரிப்பதை குறிக்கலாம். இன்று ஏற்றங்களுடன் கூடவே வரும் மாற்றங்களை ஏற்று கொள்ள தயாராக இருங்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கலாம், ஆதிக்கம் செலவு செய்யாதீர்கள் மற்றும் உங்கள் இலக்குகளில் உறுதியாக இருங்கள்

கன்னி:

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்க கூடிய ஒரு புதிய நபரை இன்று நீங்கள் சந்திப்பீர்கள். நெருங்கிய உறவுகளுக்குள் சரியான தகவல் தொடர்பு மற்றும் நேர்மையை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். முடிவுகளை எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். போதிய ஆதரவு இருக்கும் என்பதால் புதிய சவால்களை எதிர்கொள்ள நீங்கள் உற்சாகமாகவும் உந்துதலுடனும் இருக்க வேண்டும்.

துலாம்:

உங்கள் காதல் வாழ்க்கை இன்று நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் கலவையாக இருக்கும். உறவுகளுடன் மோதல் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். தகவல் தொடர்புகளில் உரிய கவனம் செலுத்துங்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் பொறுமை மற்றும் விடாமுயற்சியை கொண்டிருக்க வேண்டும். செய்ய நினைக்கும் செயல்களை முடிக்க முடியாமல் தடைகள் தடுத்தாலும் நம்பிக்கையுடன் இருங்கள்.

விருச்சிகம்:

உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். முக்கிய விஷயங்களை முடிக்க முடியாமல் சில சவால்களை சந்திக்க நேரிடும் போது, உங்களது சொந்த திறமை மீது நம்பிக்கை வைப்பது உதவிகரமாக இருக்கும். இன்று நீங்கள் பயணத்தை திட்டமிட்டு இருந்தால் அதன் மூலம் புதிய அனுபவங்களை பெறுவீர்கள்.

தனுசு:

உறவுகளுக்குள் வீண் மோதல்கள் மற்றும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க அமைதி மற்றும் பொறுமையை கடைப்பிடியுங்கள். உங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான வாய்ப்புகளை தேட இன்று ஏற்ற நாள். உங்களை சுற்றி இருக்கும் சிலர் உங்கள் மீது போட்டி, பொறாமை கொள்ளலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

மகரம்:

இன்றைய நாள் என்பது உங்கள் வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான மற்றும் வளமான நாளாக அமையும். பல நாட்களாக காத்திருந்த அங்கீகாரம் அல்லது எதிர்பாராத வாய்ப்பை இன்று பெறலாம். உங்களது பொருளாதார நிலை முன்னெப்போதையும் விட இன்று சீராக இருக்கும். ஆன்மீக வழிகாட்டிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

கும்பம்:

இன்று நீங்கள் கடினமான சில சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு இருக்கும் என்பதால் பெரிதாக அச்சம் கொள்ள தேவை இல்லை. உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு மாற்றம் இன்று நடக்கலாம். இந்த மாற்றம் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் புதிய வாய்ப்புகளையும, வளர்ச்சியையும் கொண்டு வரும்.

மீனம்:

உங்களது காதல் உறவு இன்று நேர்மறையாக இருக்கும். பணியிடத்தில் இன்று நீங்கள் ராஜதந்திர அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். உயரதிகாரிகளிடம் கோபத்தை காட்ட கூடாது. பொருளாதார ரீதியாக நீங்கள் இன்று பாதுகாப்பாக உணரும் நிலை ஏற்படும். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் கிடைக்கலாம்.

Related Posts

Leave a Comment