தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வரை மழைக்கு வாய்ப்பு..

by Lifestyle Editor

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 01.02.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

02.02.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

03.02.2024: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

04.02.2024 முதல் 07.02.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஓட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தூத்துக்குடி (தூத்துக்குடி) 5, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 4, சிவகாசி (விருதுநகர்), ஆயிக்குடி (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 3, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), ராஜபாளையம் (விருதுநகர்), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) தலா 1.

மீனவர்களூக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

Related Posts

Leave a Comment