இரண்டாம் நிலை காவலர் தேர்வை 69,000 பேர் எழுதவில்லை – தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்..

by Lifestyle Editor

இரண்டாம் நிலை காவலர் தேர்வை 3 லட்சம் பேர் எழுதிய நிலையில், 69 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு படை வீரர்கள் ஆகிய பதவிகளுக்கு 3,552 காவலர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட நிலையில், இதனைத்தொடர்ந்து 3. 5 லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 295 மையங்களில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய தேர்வு மதியம் 12.40 மணி அளவில் முடிவடைந்தது.

தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 887 பேர் இளைஞர்கள் ஆவர். மேலும், 66 ஆயிரத்து 811 பேர் பெண்களும், 50 திருநங்கைகளும் விண்ணப்பித்திருந்தனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, மிகுந்த கண்காணிப்புடன் தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் தேர்வை 3 லட்சம் பேர் மட்டுமே எழுதியதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பித்தவர்களில் 67 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் தேர்வு எழுதவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஆங்கில வழி கல்வி படித்தவர்களுக்கு தமிழில் மட்டுமே கேள்விகளும், தமிழில் அதிகமான மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டதாலும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். அதிகம் படித்தவர்களும் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்விற்கு எழுத வந்ததால், குறைந்த அளவு தகுதி உள்ள தங்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் என்றும் சில தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment