நெல்லிக்காய் ரசம்..

by Lifestyle Editor

நெல்லிக்காய் – 3
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
வேகவைத்த பருப்பு – கால் கப்,
பூண்டு – 10 பற்கள்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி,
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – கால் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,

​செய்முறை:

துவரம்பருப்பை வேகவைத் கால் கப் அளவுக்கு குழைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சீரகம், மிளகு இரண்டையும் பொடித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் விதைகளை நீக்கிய நெல்லிக்காய், தக்காளி, கொத்தமல்லி தண்டு சிறிதளவு, பூண்டு பற்கள், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு மைபோல பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து அதிலேயே பச்சை கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் பொடி, அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இதை அடுப்பில் வைத்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கொதி வந்ததும் அதில் வேகவைத்த பருப்பையும் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும்.

ரசம் நுரைத்து பொங்கி மேலே வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறலாம். சூப் போல குழந்தைகளுக்கு குடிக்கவும் கொடுக்கலாம்.

​நெல்லிக்காய் சேர்ப்பதன் நன்மைகள் :

நெல்லிக்காயில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், மினரல்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்து இருக்கின்றன.

இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். பருவ காலங்களில் ஏற்படும் உடல் உபாதைகளைச் சரிசெய்து நோய்களை விரட்டும்.

சுவாசம் தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்யும். நெஞ்சு சளியை விரட்டும்.

ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் நெல்லிக்காய் காயகல்ப மூலிகை என்று சொல்லப்படுகிறது. இதை உடலில் ஏற்படும் எல்லா நோய்களுக்கும் சாப்பிடலாம்.

சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு முதன்மையானது நெல்லிக்காய் என்று சொல்லலாம். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர, தலைமுடியும் செழித்து வளரும். சருமம் பளபளக்கும்.

Related Posts

Leave a Comment