கோயில் புளியோதரை ரகசியம்..

by Lifestyle Editor

புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்:-

கடலை பருப்பு – 100 கிராம்

உளுந்து – 50 கிராம்

காய்ந்த மிளகாய் – 1\4 கிலோ

தனியா (or) மல்லி – 5 ஸ்பூன்

சீரகம் – 2 ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

வெள்ளை எள்ளு – 3 ஸ்பூன்

வெந்தயம் – 2 ஸ்பூன்

பெருங்காயம் – சின்ன நெல்லிக்காய் அளவு கட்டி

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணை – 1\4 லிட்டர்

வேர்கடலை – 100 கிராம்

பச்சரிசி சாதம் – 4 கப்

செய்முறை:

1. கடலை பருப்பு, தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

2. காரத்திற்கு ஏற்ப 8 முதல் 10 காய்ந்த மிளகாய், கருவேப்பிலையை நல்லெண்ணை சிறிதளவு ஊற்றி வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்

3. வறுத்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

4. வெந்தயம், எள்ளு, பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தனியாக பொடி செய்துக்கொள்ள வேண்டும்.

5. அடுப்பில் கடாய் வைத்து நன்றாக சூடானதும், தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, கடலை பருப்பு, உளுந்து, வேர்க்கடலை, கருவேப்பிலை, வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்ந்து தாளித்துக்கொள்ளவும்.

6. ஊரவைத்த புளியை கரைச்சலை ஊற்றிவிட்டு, மஞ்சள் பொடி, சின்ன துண்டு வெல்லம், கள் உப்பு சேர்ந்து நன்றாக கொதிக்க விடவும்.

7. எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் முதலில் அரைத்து வைத்திருந்த கடலை பருப்பு, தனியா, மிளகாய் பொடியை சேர்த்து கிளற வேண்டும்.

8. கெட்டியானப் பின்னர், வெந்தயம், எள்ளு, பெருங்காய பொடியை சேர்த்தவுடன் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். (இந்த பொடி சேர்த்தப்பின் அதிகம் கொதிக்கக்கூடாது)

9. 4 கப் உப்பு சேர்க்காத பச்சரிசி சாதத்தை தட்டில் கொட்டி நல்லெண்ணெய், பெருங்காய பொடி தூவி நன்றாக ஆறவிடவும்.

10. சாதம் சூடு ஆறியப் பின்னர், புளிக்காய்ச்சல், பச்சை கருவேப்பிலை, தேவைப்பட்டால் உப்பு சேர்ந்து கிளறி பரிமாறவும்..

Related Posts

Leave a Comment