பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவினால் மரணம்!

by Lifestyle Editor

மலையாளத் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த பிரபல இயக்குனரான வினு, உடல் நலக்குறைவு காரணமாக, தனது 73 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார்.

கோவை சிங்காநல்லூரில் வசித்து வினு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது உடல் இன்று கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வினுவும், இயக்குனர் சுரேசும் இணைந்து ஆயுஷ்மான் பவா, மங்களம் வீட்டில் மனசேஸ்வரி குப்தா, குஷ்ருதி கட்டு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளனர். கனிச்சுகுளங்கரையில் சி.பி.ஐ., இவர்கள் கூட்டணியில் உருவான கடைசி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment