பொங்கல் சிறப்புப் பேருந்துகள் நாளை முதல் இயக்கம்!!

by Lifestyle Editor

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகையானது 3 நாட்கள் கொண்டாடப்படும். இதன் காரணமாக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14ம் தேதி வரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 சிறப்புப் பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சிறப்புப் பேருந்துகள் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment