ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு! ரயில்கள் நின்று செல்லும்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

by Editor News

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் அவ்வழியாக செல்லும் சில ரயில்கள் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் சிறப்பு வாய்ந்தது. புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பை தரிசிக்க வருவது வழக்கம்.

இதனால் திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுபோல ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வழியாக செல்லும் கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆகியவை நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களுக்கு ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment