5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து

by Column Editor

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கைக்கு தென்கிழக்கே குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் தாழ்வு நிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக, ஈரப்பதமான காற்று குவிதல் தென் மாவட்ட கடலோர மற்றும் உள் பகுதிகளில் நிலவுகிறது. ஈரப்பதமான காற்று மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தடுக்கப்படுகிறது. மேலும் மழை மேகங்கள் மிகவும் மெதுவான நகர்வு காரணமாக, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்று காலை முதல் அதீத கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சுழற்சி சற்று வடமேற்கு திசையில் குமரி கடல் பகுதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக வரும் நேரங்களில், தென் மாவட்டங்களில் மீண்டும் அதீத கனமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதீத கனமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நிலையில், வரும் நேரங்களில் மீண்டும் அதீத கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக மாலை 6 மணி நிலவரப்படி, திருவைகுண்டம் பகுதியில் 394 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு, தென் மாவட்டங்கள் மிக பெரிய இயற்கை பேரிடரை சந்தித்து உள்ளது.

இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment