ஜம்மு- காஷ்மீர் வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் – திருமாவளவன்

by Lifestyle Editor

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370 ஐ இரத்து செய்தமை செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு அரசாங்கத்தின் அதிகாரத்துவ செயற்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாகவும் நீதிமன்றங்களின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் என்பதை காட்டுவதாகவும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநிலங்களுடைய உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டு கூட்டாட்சி முறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் இந்தத் தீர்ப்பு அதற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தீர்ப்பை வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த கூட்டாட்சி முறைக்கும் உச்ச நீதிமன்றம் ஊறு விளைவித்திருக்கிறது என்றும் நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment