அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது ‘மிக்ஜாம்’ புயல்!

by Lifestyle Editor

மிக்ஜாம் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் ஆந்திராவின் பாபட்லா என்ற இடத்தில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் 28.9 செ.மீ. மழையும், பாபட்லாவில் 21 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் ஆந்திராவின் பாபட்லாவில் கரையை கடக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment