சபரிமலை:’அய்யன் ஆப்’ பயன்படுத்துவது எப்படி?

by Lifestyle Editor

சபரிமலை புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் கேரளா மாநில வனத்துறை சார்பில் ‘அய்யன் செயலி’ என்ற புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா? என்னென்ன சேவைகள் உள்ளது. அதனை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1. இந்த அய்யன் செயலி தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. மொபைல் எண்ணை உபயோகித்து ஆப்பினுள் செல்லலாம். சபரிமலை கோயிலில் நடக்கும் பூஜைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்தும் இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளன.

3. மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்களை இந்த செயலி மூலம் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

4. சபரிமலை செல்லும் வழிப்பாதைகள், வனத்தில் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதைவை குறித்த வழிகாட்டல்கள் போன்றவை இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளன.

5. அவசரக் கால உதவிக்காக தீயணைப்புத்துறை, வனத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, மின்சாரவாரியம், ரயில்வே விசாரணை, கேரள அரசு போக்குவரத்துத்துறை, மெடிக்கல் டிப்பார்ட்மெண்ட் ஆகியவற்றின் தொடர்பு எண்களும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன.

6. 2023-2024 ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் அய்யன் செயலி வெளியிடப்பட்டுள்ளது என்று கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.

7. பக்தர்கள் தேர்வு செய்யும் வழிதடங்கள் குறித்த முன்னறிவிப்பு உள்ளிட்டவைகளும் ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment