புஷ்பா – 2 படம் அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

by Lifestyle Editor

2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. தெலுங்கு, இந்தி, தமிழ் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியானது.

மாஸ் கமெர்ஷியல் ஆக்க்ஷன் கதைக்களத்தை கொண்டு இயக்கப்பட்ட இந்த படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிக்கா மந்தனா நடித்திருந்தார்.

பான் இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுனின் கேரியரில் புஷ்பா திரைப்படம் ஒரு மாபெரும் மைல்கல்லாக அமைந்தது. திரைக்கதை, இயக்கம், இசை, நடிப்பு என எல்லா எதிர்பரப்பையும் பூர்த்தி செய்தது இந்த திரைப்படம்.

சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த நடிப்பிற்காக இரண்டு தேசிய விருதுகளையும் புஷ்பா திரைப்படம் தட்டி சென்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் புஷ்பா படத்துக்கான ரசிகர்களை அள்ளிக்குவித்தது.

புஷ்பா முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பிரம்மாண்டமாக உருவாகிவரும் புஷ்பா 2 படத்தின் கிலிம்ஸ் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்திற்காக எந்த சம்பளமும் இன்னும் வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதற்க்கு பதிலாக, படம் வெளியாகி வரும் லாபத்தில் இருந்து 33% சதவீதத்தை சம்பளமாக வாங்க முடிவு செய்துள்ளாராம். புஷ்பா 2 திரைப்படம் கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

இதை வைத்து பார்த்தால் ரூ. 330 கோடி வரை அல்லு அர்ஜுன் சம்பளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`

Related Posts

Leave a Comment