சுக்கிர பிரதோஷம்.. சிவனை இப்படி வழிபட்டால் பணக்கஷ்டம் தீரும்..!

by Lifestyle Editor

வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையை தரிசித்தால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கி அருகம்புல் மாலை சார்த்துவது சிறப்பு.. சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகள் ஏராளம். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி சிவ வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு சிவ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள். திதிகளில் சிவனாருக்கு உரிய திதியாக திரயோதசி திதி போற்றி வணங்கப்படுகிறது.

திரயோதசி திதி என்பது அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் வரும். இந்த திரயோதசி திதியில் பிரதோஷ பூஜை நடைபெறும். பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் அனைத்துச் சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அப்போது நந்திதேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சிவலிங்கத் திருமேனிக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பெருமாள் அலங்காரப் பிரியன், சிவபெருமான் அபிஷேகப் பிரியன். ஆகவே, லிங்கமே வடிவெனக் கொண்டு காட்சி தரும் சிவனாருக்கு அபிஷேகங்கள் குளிரக்குளிர செய்வது நல்லது.

ஒவ்வொரு கிழமைகளில் வருகின்ற பிரதோஷத்துக்கு ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. அப்போது பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் தரிசிப்பதால் ஒவ்வொருவிதமான பலன்கள் உள்ளன.

சுக்கிர பிரதோஷம் எப்போது?

இந்து நாட்காட்டியின்படி, கார்த்திகை மாதத்தின் சுக்கிர பிரதோஷ விரதம் நவம்பர் மாதம் 24 2023, வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும். இந்நாளில் பிரதோஷ காலத்தில் அதாவது சூரிய அஸ்தமனத்திற்குப் பின் சிவபெருமானை வழிபடுவது மிகவும் நல்ல பலன்களைத் தரும். இதற்கான பூஜை இரவு 07.06 மணி முதல் 08.06 மணி வரை நடைபெறும்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் பிரதோஷம் வருவது, கடன், தரித்திரம் முதலான பொருளாதாரச் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நீக்கும் என்றும் சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்றும் தெரிவிக்கின்றனர் ஆச்சர்யப் பெருமக்கள்.

Related Posts

Leave a Comment