ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து!!

by Lifestyle Editor

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்நிலையில் நீலகிரியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு காரணமாக மலை ரயில் சேவை இன்று (நவ.22) ஒரு நாள் மட்டும் ரத்து ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment