ஹிப் ஹாப் ஆதி இயக்குனருடன் இணையும் விக்ரம் …

by Lifestyle Editor

துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. பல வருடங்களாக சில பிரச்சனைகள் காரணமாக வெளிவராமல் இருந்த இப்படம் வருகிற நவம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது.

இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் படம் வெளிவரவுள்ளது. இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் தான் வெளியிட்டனர்.

மேலும் அடுத்ததாக அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் சீயான் 62 படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்திற்கான இயக்குனரையும் தேர்ந்தெடுத்து விட்டாராம் விக்ரம். ஹிப் ஹாப் ஆதியை வைத்து தனது அறிமுக படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் ராம் என்பவர் தான் சீயான் 63 படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படத்திற்கான முதற்கட்ட பணியில் இயக்குனர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

Related Posts

Leave a Comment