எனது 25ஆண்டுகால அரசியல் பயணம் முடிவுக்கு வருகின்றது!

by Lankan Editor

”எனது 25 ஆண்டுகால அரசியல் பயணம் முடிவுக்கு வருகின்றது. கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பா.ஜ.கவில் இருந்து விலகுகின்றேன்” என நடிகை கௌதமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். தேசத்தின் வளர்ச்சியில் என்னுடைய பங்கை அளிக்க 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் அக்கட்சியில் இணைந்தேன்.

இதனால் என்னுடைய வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்தித்தேன். இன்று வரை என்னுடைய வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத இன்னல்கள் உள்ளன. கட்சியிடமிருந்தோ அதன் தலைவர்களிடமிருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில், என்னுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என்னுடைய வாழ்க்கை சம்பாத்தியங்களில் என்னை ஏமாற்றிய நபருக்கு அவர்களில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது குறித்து எனக்கு தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய வலி மற்றும் வேதனையுடனும், அதே நேரம் கடும் உறுதியுடனும் இந்த இராஜினாமா கடிதத்தை எழுதுகிறேன்”இவ்வாறு கௌதமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment