விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோ.. சம்யுக்தாவிடம் தவறாக நடந்தேனா? ரவி தரப்பு விளக்கம்

by Lifestyle Editor

சீரியல் நடிகர்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் ஆகியோர் காதலித்து திருமணம் செய்த நிலையில் ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டனர்.

சம்யுக்தா ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் காதலில் இருந்தார் என ஆடியோ ஆதாரத்தை விஷ்ணுகாந்த் தரப்பு சமீபத்தில் ஆடியோ வெளியிட்டு இருந்தது.

விஷ்ணுகாந்த உடன் காதலில் இருக்கும்போதே ஏன் ரவி உடன் பேசிக்கொண்டிருந்தாய் என ஒரு நபர் கேட்க, ‘அவர் என்னிடம் தவறாக நடந்தார். அதை அவர் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று தான் பேசினேன்’ என சம்யுக்தா பதில் கூறினார்.

VJ ரவி அறிக்கை

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ‘யாரோ ஒருவர் என்னை,. காதலித்து, அதை நான் மறுத்தால்.. அதற்கு நான் பொறுப்பா?’

“ஆறு வருடம் உழைத்து நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். கன்டென்ட்டுக்காக ஒருவரது வாழ்க்கையை அழிகிறார்கள்” என கோபமாக தெரிவித்து இருக்கிறார் ரவி.

ரவியின் அறிக்கையை நடிகை வெண்பா வெளியிட்டு இருக்கிறார்.

Related Posts

Leave a Comment